ADDED : மார் 14, 2025 05:03 AM

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே குட்கா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து 9 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் நேற்று பருகம்பட்டு கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தங்கமணி மகன் சூரிய மணிகண்டன் என்பவரது மளிகை கடையில் குட்கா பாக்கெட்டுகள் விற்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இதை எடுத்து போலீசார் சூரிய மணிகண்டனை, 32; கைது செய்து கடையில் வைத்திருந்த 9 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.