/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கிடப்பில் போடப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணிகள் கிடப்பில் போடப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணிகள்
கிடப்பில் போடப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணிகள்
கிடப்பில் போடப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணிகள்
கிடப்பில் போடப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணிகள்
ADDED : மார் 14, 2025 05:03 AM

திருவெண்ணெய்நல்லுார்: பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டு வரும் மேல்நீலை நீர் தேக்க தொட்டி பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் போதிய குடிநீர் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கருவேப்பிலைபாளையம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். . அப்பகுதியில் போதிய குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் அவதியடைந்து வந்தனர். இதையெடுத்து பொது நீதியிலருந்து 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு காமன் கோவில் தெருவில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி துவங்கியது.
கடந்த 6 மாத காலமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள்ளதால்,
கிராமத்தில் அதிகளவு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நீர் தேக்க தொட்டி கட்டும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.