/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மொபைல் போன் சார்ஜரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி மொபைல் போன் சார்ஜரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
மொபைல் போன் சார்ஜரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
மொபைல் போன் சார்ஜரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
மொபைல் போன் சார்ஜரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
ADDED : ஜூன் 16, 2024 10:33 PM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே மொைபல் போனுக்கு சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கியதில், கொத்தனார் இறந்தார்.
விழுப்புரம் அடுத்த திருவாமத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன் மகன் அய்யப்பன், 32; கொத்தனார். இவர், நேற்று முன்தினம் மாலை, அருகே உள்ள எம்.குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற கட்டட மேஸ்திரியுடன், விழுப்புரம் அடுத்த கண்டமானடியில் கட்டுமான வேலைக்குச் சென்றார்.
அப்போது, அய்யப்பன் அவரது மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டபோது, சார்ஜர் ஒயரில் ஏற்பட்ட மின் கசிவால் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.
உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அய்யப்பன் இறந்து விட்டதை உறுதி செய்தனர். புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.