/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ காட்டு முயல் வேட்டையாடியவர் நாட்டுத் துப்பாக்கியுடன் கைது காட்டு முயல் வேட்டையாடியவர் நாட்டுத் துப்பாக்கியுடன் கைது
காட்டு முயல் வேட்டையாடியவர் நாட்டுத் துப்பாக்கியுடன் கைது
காட்டு முயல் வேட்டையாடியவர் நாட்டுத் துப்பாக்கியுடன் கைது
காட்டு முயல் வேட்டையாடியவர் நாட்டுத் துப்பாக்கியுடன் கைது
ADDED : ஜூலை 04, 2024 12:30 AM

திண்டிவனம் : திண்டிவனம் அருகே காட்டு முயலை வேட்டையாடிய நபரை வனத்துறையினர் கைது செய்தனர்.
திண்டிவனம், வனத்துறை வனவர் கோகுலலட்சுமி தலைமையில் வன காப்பாளர்கள் பிரபு, பச்சையப்பன், பூபாலன் உள்ளிட்டவர்கள் நேற்று காலை 5:30 மணியளவில், திண்டிவனம் - மரக்காணம் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆத்துார் எல்லை பகுதியில், பெட்ரோல் பங்க் அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர், திண்டிவனம் நத்தமேடு நறக்குறவர் காலனியை சேர்ந்த ஏழுமலை மகன் அஜித், 27; பாபு மகன் சூர்யா, 25; என தெரியவந்தது. மேலும், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தில் வேட்டையாடப்பட்ட காட்டு முயல் இருந்தது தெரியவந்தது.
விசாரித்துக் கொண்டிருந்த போது, அஜித் தப்பியோடினார். அதனைத் தொடர்ந்து பிடிபட்ட சூர்யா மற்றும் பைக் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து கைது செய்தனர். மேலும், தப்பியோடிய அஜித்தை தேடி வருகின்றனர்.