/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க கோலம் போட்டு விழிப்புணர்வு பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க கோலம் போட்டு விழிப்புணர்வு
பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க கோலம் போட்டு விழிப்புணர்வு
பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க கோலம் போட்டு விழிப்புணர்வு
பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க கோலம் போட்டு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 04, 2024 12:21 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் பொது இடத்தில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் நகராட்சி சார்பில் கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திண்டிவனம் நகாரட்சியில் பொது இடங்களில் குப்பை தொட்டிகள் வைப்பதில்லை. குப்பைகள் பொது இடங்களில் கொட்டுவதை தவிர்க்கும் வகையில் நகராட்சி வாகனங்கள் மூலம் வீடு வீடாகச் சென்று, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து துாய்மை பணியாளர்கள் மூலம் பெறப்படுகிறது.
பல தெருக்களில் குப்பைகளை நகராட்சி துாய்மைப் பணியாளர்களிடம் வழங்காமல், தெருக்களின் சந்திப்புகளில் குப்பைகளைக் கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதைத் தவிர்க்கும் வகையில் வழக்கமாக குப்பைகளைக் கொட்டி வரும் இடங்களை, நகராட்சி துாய்மைப் பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்து, அந்த இடத்தில் குப்பைகளை இந்த இடத்தில் கொட்டாதீர்கள் என்ற வாசகத்துடன் கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.