Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மனைவி கண்டிப்பு; கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு; கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு; கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு; கணவர் தற்கொலை

ADDED : ஜூலை 22, 2024 11:49 PM


Google News
செஞ்சி : குடித்து விட்டு வருவதை மனைவி கண்டித்ததால் கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செஞ்சி அடுந்த என்.ஆர்.பேட்டை ஊராட்சி, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 45: செஞ்சியில் உள்ள மரவாடியில் வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உடைய இவர், தினமும் சம்பாதிக்கும் பணத்தில் குடித்து வந்தார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஆறுமுகத்தை அவரது மனைவி அமுதா 40; கண்டித்தார். இதனால், மனமுடைந்த ஆறுமுகம் மீண்டும் மரவாடிக்குச் சென்று அங்கு துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us