ADDED : ஜூலை 22, 2024 11:50 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் கோவிலுக்குச் செல்லாததை தந்தை கண்டித்ததால், மாணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம், சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்தவர் மங்கல்ராஜ், 42; இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், கார்த்திகேயன்,17; என்ற மகனும் உள்ளனர். கார்த்திகேயன், விழுப்புரம் நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
கும்பாபிஷேகத்திற்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு கும்பாபிஷேக புனித நீர் வாங்கி வரும்படி கார்த்திகேயனிடம் தந்தை மங்கல் ராஜ் கூறியுள்ளார்.
கார்த்திகேயன் போக மறுத்ததால், திட்டியுள்ளார்.
இதில் விரக்தியடைந்த கார்த்திகேயன், வீட்டில் புடவையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.