Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு அ.தி.மு.க., பின்வாங்கியதின் 'பின்னணி'

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு அ.தி.மு.க., பின்வாங்கியதின் 'பின்னணி'

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு அ.தி.மு.க., பின்வாங்கியதின் 'பின்னணி'

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு அ.தி.மு.க., பின்வாங்கியதின் 'பின்னணி'

ADDED : ஜூன் 18, 2024 05:09 AM


Google News
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., புகழேந்தி மறைவையொட்டி, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஜூலை 10 ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது .வேட்பு மனு தாக்கல் கடந்த 14ம் தேதி துவங்கியது.

இந்த தேர்தலில் தி.மு.க.,சர்பில் அன்னியூர் சிவா, பா.ம.க.,சார்பில் அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டி யிடுகின்றனர்.

பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க., இடைத்தேர்தலலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது. இதனால் இந்த தொகுதியில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

ஆளுங்கட்சி அதிகார பலத்தையும், பணத்தையும் வாரி இறைப்பார்கள், பரிசு பொருட்கள் கொடுப்பார்கள். மக்கள் ஜனநாயக முறைப்படி வாக்களிக்க விட மாட்டார்கள் என்பதால், புறக்கணிப்பதாக அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் பழனிச்சாமி தெரிவித்தார். இதற்கிடையில் அ.தி.மு.க., புறக்கணிப்பிற்கான காரணம் குறித்து, விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் தரப்பில் கூறியதாவது:

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு வந்த உடன், லோக்சபா தேர்தலுக்காக 7ம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்க இருந்தது. கடைசி கட்ட ஓட்டுப்பதிவின் போது, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆளுங்கட்சி அமைதியாக இருந்த சமயத்தில், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க.,செயலாளர் சண்முகம் உத்தரவின் பேரில், விக்கிரவாண்டி தொகுதிக்கு, மாவட்டத்திலுள்ள கட்சியின் நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகளை கொண்டு, ஓட்டுச்சாடி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

இவர்கள் தொகுதிக்கு சென்று வாக்காளர் சரி பார்ப்பு, சாதி வாரியாக வாக்காளர் கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளை முடித்து, மாவட்ட செயலாளரிடம் அறிக்கை சமர்பித்து விட்டனர்.

இந்த சூழ்நிலையில் 7 ம் கட்ட ஓட்டுப்பதிவின் துவங்கிய நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியடவில்லை.

தனியாக இடைத்தேர்தல் நடந்தால், அ.தி.மு.க.,விற்கு கோடிக்கணக்கில் செலவாகும். மேலும் லோக்சபா தேர்தலின் போதே விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் நடந்தாலும், ஒரே செலவுடன் தேர்தலை முடித்து விடலாம்.

இதனால் அ.தி.மு.க.,அந்த சமயத்திலேயே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்துவிட்டது.மேலும், இடைத்தேர்தலுக்கு குறைந்தது ரூ.50 கோடி செலவாகும்.

இந்த பணத்தை வைத்துக்கொண்டு,வரும் 2026 சட்டமன்ற தேர்தலின் போது, 6 சட்டமன்ற தொகுதியின் தேர்தல் செலவை மேற்கொள்ள முடியும்.

இதை கருத்தில் கொண்டு, அ.தி.மு.க., தலைமை விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது, என்று நிர்வாகிகள் தரப்பில் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us