/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அதிகாரிகள் சரியாக பணியில் இல்லாததால் கோப்புகள் தேங்கி விண்ணப்பித்தோர் தவிப்பு அதிகாரிகள் சரியாக பணியில் இல்லாததால் கோப்புகள் தேங்கி விண்ணப்பித்தோர் தவிப்பு
அதிகாரிகள் சரியாக பணியில் இல்லாததால் கோப்புகள் தேங்கி விண்ணப்பித்தோர் தவிப்பு
அதிகாரிகள் சரியாக பணியில் இல்லாததால் கோப்புகள் தேங்கி விண்ணப்பித்தோர் தவிப்பு
அதிகாரிகள் சரியாக பணியில் இல்லாததால் கோப்புகள் தேங்கி விண்ணப்பித்தோர் தவிப்பு
ADDED : ஜூன் 18, 2024 05:09 AM
விழுப்புரம் நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் அதிகாரிகள் சரிவர பணியில் இல்லாததால் கோப்புகள் தேங்கி விண்ணப்பித்தோர் மனஉளைச்சலில் தவிக்கின்றனர்.
அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகள், மனை பிரிவை வரைமுறைப்படுத்துதல், புதிய வீட்டுமனை பிரிவிற்கு அங்கீகாரம் பெறுவது உள்ளிட்ட நடைமுறைகளுக்காக விழுப்புரம் சென்னை நெடுஞ்சாலையில் நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகம் இயங்குகிறது.
இங்கு, தனி நபர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மனு செய்து லட்சக்கணக்கில் பணம் செலுத்தி அதற்கான அனுமதி கிடைக்காமல் காத்துள்ளனர். இதனால் அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளை வாங்கிய தனிநபர்கள் பலர் வீடு கட்ட விண்ணப்பித்து அதற்கான அரசு கட்டணம் மட்டுமின்றி, அதிகாரிகளுக்கான கவனிப்பையும் செலுத்தி அவர்களின் கனவு இல்லம் கைகூடாத அதிர்ச்சியில் காத்துள்ளனர்.
செல்வாக்கில் உள்ள சில ரியல் எஸ்டேட் அதிபர்கள் மட்டும் தங்களுக்கான பணியை கணகட்சிதமாக ஒரு சில மாதங்களில் முடித்துக் கொண்டு கிளம்பி விடுகின்றனர். இந்த நிலையில், இங்கிருந்த நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குனர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் பணிஓய்வு பெற்றார்.
இங்கு, செங்கல்பட்டில் உள்ள உதவி இயக்குநர் ஒருவர், கூடுதல் பொறுப்பாக மாதம் இரு முறை மட்டும் விழுப்புரம் அலுவலகம் வந்து செல்கிறார். இது மட்டுமின்றி, இங்குள்ள அலுவலக கண்காணிப்பாளரும் நீண்டநாள் விடுப்பில் உள்ளார். மேலும், கோப்புகளை தட்டச்சு பணி செய்யும் பணியாளரும் இல்லாததால், கோப்புகள் பல மாதங்களாக தேங்கியுள்ளது.
அதிகாரிகளின் மெத்தன போக்கால் இங்கு கோப்புகள் பல மாதங்களாக தேங்கி, விண்ணப்பித்தோர் மிகுந்த மனஉளைச்சலில் தவிக்கின்றனர்.