/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பூத் சிலிப் வழங்கும் பணி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பூத் சிலிப் வழங்கும் பணி
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பூத் சிலிப் வழங்கும் பணி
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பூத் சிலிப் வழங்கும் பணி
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பூத் சிலிப் வழங்கும் பணி
ADDED : ஜூன் 28, 2024 11:21 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பூத் சிலிப்வழங்கும் பணியை கலெக்டர் துவக்கி வைத்தார் .
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடை பெற உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள 275 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டளிக்க உள்ள வாக்காளர்களுக்கு 28ம் தேதி(நேற்று) முதல் வரும் ஜூலை 3ம் தேதிவரை பூத் சிலிப் வழங்கும் பணி துவங்கியது. விக்கிரவாண்டி தொகுதி அய்யூர் அகரம், சிந்தாமணி, முண்டியம்பாக்கம் பகுதியில் நேற்று நடைபெற்ற பூத் சிலிப் வழங்கும் பணியை கலெக்டர் பழனி துவக்கி வைத்தார் . இதில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், தேர்தல் நேர் முக உதவியாளர்கள் முருகேசன்,தமிழரசன், தனி தாசில்தார்கள் கணேஷ், செந்தில்குமார் , மண்டல துணை தாசில்தார்ஆறுமுகம் , வருவாய் ஆய்வாளர் தெய்வீகன்,வி.ஏ.ஓ.,க்கள் சுகுணா, கோவிந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.