/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தி.மு.க., அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் தொடருவதற்கு ஆதரவு தர வேண்டும் மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி பேச்சு தி.மு.க., அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் தொடருவதற்கு ஆதரவு தர வேண்டும் மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி பேச்சு
தி.மு.க., அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் தொடருவதற்கு ஆதரவு தர வேண்டும் மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி பேச்சு
தி.மு.க., அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் தொடருவதற்கு ஆதரவு தர வேண்டும் மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி பேச்சு
தி.மு.க., அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் தொடருவதற்கு ஆதரவு தர வேண்டும் மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி பேச்சு
ADDED : ஜூன் 28, 2024 11:20 PM

விக்கிரவாண் : விக்கிரவாண்டி தொகுதியில் வளர்ச்சித் திட்ட பணிகள் ஏராளம் செய்திட்ட அரசிற்கு உதய சூரியன் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும் என்று, தி.மு.க.,மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.
விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம் சிறுவள்ளிக்குப்பம், வாக்கூர், பகண்டை, தென்னவராயன் பட்டு, செய்யாத்து விண்ணான், வெட்டுக்காடு, ராதாபுரம் ஆகிய இடங்களில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க.,வேட்பாளர் சிவாவை ஆதரித்து மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி பேசியதாவது:
விக்கிரவாண்டி தொகுதியில் புகழேந்தி எம்.எல்.ஏ., எண்ணற்ற வளர்ச்சி திட்ட பணிகளை செய்துள்ளார். ஒன்றியத்தில் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் செய்யாது விண்ணான் பகுதியில் ரூபாய் 30 லட்சத்தில் புதிய அரசு பள்ளி கட்டடமும், ரூபாய் 2 லட்சத்தில் அங்கன்வாடி மறு சீரமைப்பு பணியும், பள்ளிக்கு ரூபாய் 11 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும், தலா ரூ.5 லட்சத்தில் சிமெண்ட் சாலை, தடுப்பணை அமைக்கும் பணியும் நடைபெற்றுள்ளது.
இது இந்த பகுதியில் மட்டுமல்ல, ஒன்றியம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்றுள்ளது.
மேலும் தொடர்ந்து நலப்பணித்திட்டங்கள் நிறைவேறுவதற்கு வேட்பாளர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து ஆதரவு தர வேண்டும் என்று பேசினார். இதில் எம் .எல். ஏ.,க்கள் புதுச்சேரி சிவா, செந்தில்குமார், சம்பத், ஒன்றிய சேர்மன்கள் சங்கீத அரசி ரவிதுரை, வாசன், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிதுரை, வானூர் முரளி, ம.தி.மு.க., மாவட்டச் செயலாளர் பாபு கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் செந்தில்குமார், கஸ்தூரி பாண்டியன், கண்காணிப்பு குழு எத்திராசன், இளைஞர் அணி பாரதி, கலைச் செல்வன், நிர்வாகிகள் வரதராஜன், பாண்டியன்,ராஜசேகர் செல்வராஜ்,செழியன், தனஞ்செயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.