/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஏற்பாடு அப்சர்வர்களுடன் ஆலோசனை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஏற்பாடு அப்சர்வர்களுடன் ஆலோசனை
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஏற்பாடு அப்சர்வர்களுடன் ஆலோசனை
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஏற்பாடு அப்சர்வர்களுடன் ஆலோசனை
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஏற்பாடு அப்சர்வர்களுடன் ஆலோசனை
ADDED : ஜூன் 22, 2024 05:57 AM

விழுப்புரம் : விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை இடைத்தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகள் குறித்து, தேர்தல் அப்சர்வர்களுடன் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் பொது பார்வையாளர் அமித்சிங் பன்சால், காவல்துறை பார்வையாளர் அஜய்குமார் பாண்டே, தேர்தல் செலவினப் பார்வையாளர் மணிஷ்குமார் மீனா ஆகியோருடன், மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் பழனி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். அப்போது, இதுவரை நடந்துள்ள பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.
அப்போது இதுவரை நடந்துள்ள ஆண், பெண் வாக்காளர்கள் விவரம். ஓட்டுச்சாவடி மையங்கள் மற்றும் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் குறித்த விபரங்கள். ஓட்டுச்சாவடி எண்ணும் மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வசதி.
தற்போது வரை வேட்பு மனுதாக்கல் செய்தவர்களின் விபரங்கள். 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு, வீட்டிலிருந்தபடியே ஓட்டு போடுவதற்கான விருப்ப படிவம் வழங்கிய விபரம்.
ஓட்டுப்பதிவு நாளன்று பணிபுரிய உள்ள நிலை அலுவலர்கள், பயன்படுத்தப்பட உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை.
பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு விபரங்கள், இதுவரை கைப்பற்றப்பட்ட ரொக்கப்பணம் மற்றும் பொருட்கள் குறித்த விபரங்கள் உள்ளிட்டவைகள் குறித்து அப்சர்வர்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தல் தொடர்பாக இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
எஸ்.பி., தீபக் சிவாச், கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.