ADDED : ஜூன் 19, 2024 11:12 PM

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் ஒன்றியத்தில் த.வெ.க., ஆலோசனை கூட்டம் நடந்தது.
மேல்மலையனுார் ஒன்றியம் சங்கிலிகுப்பம் கிராமத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில், ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஒன்றிய தலைவர் முரளி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரகுபதி, ஒன்றிய பொருளாளர் கார்த்திகேயன், துணை தலைவர் சதிஷ்குமார், துணை செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தனர்.
த.வெ.க., நிறுவனர் நடிகர் விஜயின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகளை வழங்குவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் கிழக்கு, மேற்கு ஒன்றிய இளைஞர் அணி தலைவர்கள் ராஜதுரை, அன்பரசன், ஒன்றிய மாணவரணி தலைவர்கள் அருள், பிரதாப், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.