/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED : ஜூன் 23, 2024 05:57 AM

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் அங்காளம்மன் முன் 108 பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பூசாரிகள் 1008 அம்மன் துதியுடன் திருவிளக்கு பூஜையை நடத்தினர்.
பூஜைக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சுரேஷ் மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.