ADDED : ஜூன் 23, 2024 05:56 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் தி.மு.க., வேட்பாளர் உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
விக்கிரவாண்டி மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட வி.சாலை, அடைக்கலாபுரம் , கொங்கராம்பூண்டி, சின்னதச்சூர், ஆசூர், பொன்னங்குப்பம், மேலக்கொந்தை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடந்த பிரசாரத்திற்கு மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி வேட்பாளர் சிவாவுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு கேட்டு பேசுகையில், 'தமிழக முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி, மகளிர் உரிமை தொகை, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். வி.சாலை பகுதியில் விக்கிரவாண்டி நீதி மன்ற வளாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. மேலக்கொந்தை ஏரிக்கரையில் குறுகலான சாலையை அகலப்படுத்தி புதிய தார்சாலையும், மேலக் கொந்தை - தென்பேர் சாலையில் சங்கராபரணி ஆற்றில் புதிய மேம்பாலம்.
ஆசூர் சாலையில் புதிய மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் இப்பகுதி மக்களுக்கு செயல்படுத்தியுள்ளார்.
மேலும் வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து செய்திட சிவாவுக்கு உதய சூரியன் சின்னத்தில் ஓட்டு அளித்து பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி பேசினார்.
முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, செயலாளர் ஜெயபால், தலைவர் முரளி, கவுன்சிலர்கள் இளவரசி, சாவித்திரி, ரவிச்சந்திரன், செல்வம் , முன்னாள் கவுன்சிலர் அசோக்குமார், ஊராட்சி தலைவர் சாவித்திரி கவியரசன், இளைஞரணி பாலகிருஷ்ணன், கிளைச் செயலாளர்கள் குமாரவேல், சம்பத், சுதாகர், ராம்குமார், சங்கர், விஜயவேலன், வி.சி., மாவட்ட செயலாளர் திலிபன், ஒன்றிய செயலாளர்கள் வெற்றி வேந்தன், ஜெயச்சந்திரன், காங்., நகர தலைவர் குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.