/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தனியார் நிறுவனத்தில் திருட்டு; கேரளா வாலிபர் மீது வழக்கு தனியார் நிறுவனத்தில் திருட்டு; கேரளா வாலிபர் மீது வழக்கு
தனியார் நிறுவனத்தில் திருட்டு; கேரளா வாலிபர் மீது வழக்கு
தனியார் நிறுவனத்தில் திருட்டு; கேரளா வாலிபர் மீது வழக்கு
தனியார் நிறுவனத்தில் திருட்டு; கேரளா வாலிபர் மீது வழக்கு
ADDED : ஜூன் 19, 2024 11:17 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் வேலை செய்த தனியார் நிறுவனத்தில் திருடியதாக கேரள வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி மகள் இந்துமதி, 37; விழுப்புரம் இந்திரா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.
இந்த நிறுவனத்தில் போட்டோகிராபராக பணியாற்றி வந்த, கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், கருங்காச்சல் பகுதியை சேர்ந்த பவுலின்வடகேண்டி,25, என்பவர், அந்த நிறுவனத்திலிருந்த மொபைல் போன், கேமரா லென்ஸ்கள், மெமரி கார்டு என 67 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச்சென்றார்.
இது குறித்து, இந்துமதி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், பவுலின்வடகேண்டி மீது வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.