/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வி.ஏ.ஓ., அலுவலக மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்தது வி.ஏ.ஓ., அலுவலக மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்தது
வி.ஏ.ஓ., அலுவலக மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்தது
வி.ஏ.ஓ., அலுவலக மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்தது
வி.ஏ.ஓ., அலுவலக மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்தது
ADDED : ஜூன் 01, 2024 06:52 AM

செஞ்சி : வல்லம் அடுத்த மேல்சித்தாமூர் கிராமத்தில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் பழு தாகி உள்ளது. இதை புதுப்பிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக வருவாய்த்துறை சார்பில் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 11:00 மணியளவில் வி.ஏ.ஓ., செல்வம் தனது அலுவலகத்தில் பொது மக்களிடம் மனுக்களை பெற்று அலுவலக பணிகளை செய்து கொண்டிருந்தார்.
அப்போது மேற்கூரையின் சிமென்ட் காரை பெயர்ந்து கீழே விழுந்தது. அதிஷ்டவசமாக அந்த இடத்தில் வி.ஏ.ஓ., மற்றும் பொதுமக்கள் யாரும் இல்லாததால் காயமின்றி தப்பினர்.
மீதம் உள்ள காரையும் எப்போது வேண்டுமானாலும் பெயர்ந்து விழும் நிலை இருப்பதால் தொடர்ந்து வி.ஏ.ஓ., மற்றும் ஊழியர்கள் அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.