ADDED : ஜூலை 01, 2024 06:20 AM
விழுப்புரம் : வளவனுார் அருகே ஒருவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் அருகே நல்லரசன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன், 55; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் அய்யப்பன், 46; இவர், நேற்று முன்தினம் கோவிந்தன் வீட்டின் எதிரே இருந்த கிரில்கேட் மற்றும் அதில் கட்டி வைத்திருந்த சாக்குகளை கத்தியால் கிழித்துள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட கோவிந்தனை, திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
புகாரின் பேரில், வளவனுார் போலீசார் அய்யப்பன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.