/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ முதன்மைக் கல்வி அலுவலகத்தில் முடிவுக்கு வந்தது பனிப்போர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் முடிவுக்கு வந்தது பனிப்போர்
முதன்மைக் கல்வி அலுவலகத்தில் முடிவுக்கு வந்தது பனிப்போர்
முதன்மைக் கல்வி அலுவலகத்தில் முடிவுக்கு வந்தது பனிப்போர்
முதன்மைக் கல்வி அலுவலகத்தில் முடிவுக்கு வந்தது பனிப்போர்
ADDED : ஜூலை 22, 2024 11:55 PM
விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நிலவிய பனிப்போர் முடிவுக்கு வந்தது.
விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் முக்கிய பதவிக்கு வரும் அதிகாரி மற்றும் அலுவலக முக்கிய பொறுப்பில் உள்ளவர்களிடையே அதிகார போட்டி, நீண்ட நாட்களாக நிலவி வந்தது. குறிப்பாக, முதன்மை அதிகாரி பிறப்பிக்கும் உத்தரவுகள் முழுமையாக கடை பிடிக்கப்படுவதில்லை. மேலும்., பள்ளி கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் வாய்மொழி உத்தரவுகளை அமல் படுத்துவதில் பிரச்னை எழுந்தது.
மாவட்ட அதிகாரியின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில், அலுவலக பணியில் உள்ள சில பணியாளர்கள், தனி அதிகாரம் செலுத்தி வருவதாக புகார் நிலவியது. இதனால், அலுவலக நடைமுறைகளை மேற்கொள்வதில் முதன்மை அதிகாரி மற்றும் அலுவலர்கள் இடையே நீண்ட நாட்களாக பனிப்போர் நிலவியது.
இந்நிலையில், கடந்த மாதம் சென்னையில் இருந்து பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர், விழுப்புரம் மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அலுவலகத்தில் நடைபெறும் அதிகார போட்டி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் எதிரொலியாக, அலுவலகத்தில் நிர்வாக அந்தஸ்தில் இருந்த 2 அலுவலர்கள், வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
இதன் மூலம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்று வந்த பனிபோர் முடிவுக்கு வந்துள்ளது.