/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இரு குழந்தைகள் கொலை வழக்கு காலாப்பட்டு போலீசிற்கு மாற்ற முடிவு இரு குழந்தைகள் கொலை வழக்கு காலாப்பட்டு போலீசிற்கு மாற்ற முடிவு
இரு குழந்தைகள் கொலை வழக்கு காலாப்பட்டு போலீசிற்கு மாற்ற முடிவு
இரு குழந்தைகள் கொலை வழக்கு காலாப்பட்டு போலீசிற்கு மாற்ற முடிவு
இரு குழந்தைகள் கொலை வழக்கு காலாப்பட்டு போலீசிற்கு மாற்ற முடிவு
ADDED : ஜூலை 14, 2024 06:30 AM
மரக்காணம் : மரக்காணம் அருகே பெற்ற தந்தையே தனது இரு குழந்தைகளை கடலில் வீசி கொலை செய்த வழக்கை, புதுச்சேரி காலாப்பட்டு போலீசாருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், அடுத்த கூனிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தவேலு,33; இவரது மனைவியை புதுச்சேரி பெரியக்கடை போலீசார், கடந்த 10ம் தேதி விபசார வழக்கில் கைது செய்தனர்.
அதனை அறிந்த ஆனந்தவேலு, அவமானம் தாங்காமல், கடந்த 11ம் தேதி தனது மகளகள் ஜோவிதா, 4; சுஸ்மிதா,1; ஆகியோரை கடலில் வீசி கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
மரக்காணம் போலீசார் கொலை வழக்கு பதிந்து ஆனந்தவேலுவை கைது செய்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஆனந்தவேலு புதுச்சேரி மாநிலம் காலப்பட்டில் வசித்து வந்ததால், இந்த வழக்கை காலாப்பட்டு போலீசாருக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர்.