/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இடைத்தேர்தலில் தி.மு.க.,வெற்றி அமைச்சர் இனிப்பு வழங்கல் இடைத்தேர்தலில் தி.மு.க.,வெற்றி அமைச்சர் இனிப்பு வழங்கல்
இடைத்தேர்தலில் தி.மு.க.,வெற்றி அமைச்சர் இனிப்பு வழங்கல்
இடைத்தேர்தலில் தி.மு.க.,வெற்றி அமைச்சர் இனிப்பு வழங்கல்
இடைத்தேர்தலில் தி.மு.க.,வெற்றி அமைச்சர் இனிப்பு வழங்கல்
ADDED : ஜூலை 14, 2024 06:55 AM

திண்டிவனம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.,வெற்றியைத் தொடர்ந்து, திண்டிவனத்தில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க., வேட்பாளர் அன்புமணியை விட 67 ஆயிரத்து 757 ஓட்டுகள் கூடுதலா பெற்று வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து திண்டிவனம் செஞ்சி ரோட்டில், நேற்று மாலை, அமைச்சர் மஸ்தான் தலைமையில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் சேகர், பொருளாளர் ரமணன், இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சந்திரன், தொண்டரணி பிர்லாசெல்வம், வர்த்தகர் அணி துணைத் தலைவர் பிரகாஷ், நகர செயலாளர் கண்ணன், துணைச் செயலாளர் கவுதமன், அவைத் தலை வர் ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், நிர்வாகிகள் வெங்கடேச பெருமாள், கன்னியப்பன், காமராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.