ADDED : ஜூலை 22, 2024 11:52 PM
செஞ்சி : வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் ஜெயசுந்தரம் 30: விவசாயி. திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர், சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
நேற்று காலை மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த அவர், தனது விவசாய நிலத்தில் உள்ள மாமரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.