/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தாரா? திண்டிவனம் போலீசார் விசாரணை மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தாரா? திண்டிவனம் போலீசார் விசாரணை
மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தாரா? திண்டிவனம் போலீசார் விசாரணை
மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தாரா? திண்டிவனம் போலீசார் விசாரணை
மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தாரா? திண்டிவனம் போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 22, 2024 11:50 PM

திண்டிவனம் : திண்டிவனம் அருகே வாலிபர் மின்சாரம் தாக்கி இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த ஏப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பாவு மகன் ஏழுமலை, 34; இவர், அதே ஊரில் சமோசா தயாரித்து மொத்த வியாபாரம் செய்து வந்தார்.
இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தின் மீது ஏழுமலை ஏறி பழுதை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று மின்கம்பத்திலிருந்து தலைகுப்புற கீழே விழுந்தார். உடன், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இவருக்கு சூரியா என்ற மனைவியும் 7 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
ஏழுமலையின் மனைவி சூரியா நேற்று காலை ஒலக்கூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், ஏழுமலை மின்சாரம் தாக்கி இறந்தாரா அல்லது கீழே விழுந்ததில் இறந்தாரா என்பது குறித்து, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.