/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தி.மு.க., ஆர்ப்பாட்டம் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 28, 2024 04:14 AM

விழுப்புரம், : மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் சிறப்பு நிதி வழங்காத பா.ஜ., அரசை கண்டித்து தி.மு.க., சார்பில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தெற்கு மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். மாநில மருத்துவரணி தலைவர் கனிமொழி சோமு கண்டன உரையாற்றினார்.
ரவிக்குமார் எம்.பி., அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் சிவா, லட்சுமணன், பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், துணை செயலாளர் முருகன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, செந்தமிழ்செல்வன், சீத்தாபதி சொக்கலிங்கம், நகர செயலாளர்கள் சக்கரை, கண்ணன், ஜீவா, ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, பழனி, கவுன்சிலர் ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன், மலையரசன் எம்.பி., மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சுப்ராயலு வரவேற்றார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு சிறப்பு நிதி வழங்காத பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை கண்டித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அங்கையற்கண்ணி, திருநாவுக்கரசு, மாவட்ட அவைத் தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம், காமராஜ், அண்ணாதுரை, ஒன்றிய சேர்மன்கள் அலமேலு ஆறுமுகம், சத்தியமூர்த்தி, வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், தாமோதரன், திலகவதி நாகராஜன், ராஜவேல், துணை சேர்மன்கள் சென்னம்மாள் அண்ணாதுரை, பேரூராட்சி சேர்மன்கள் வீராசாமி, ரோஜாரமணி, நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர்கள் கனகராஜ், பெருமாள், துரை, அசோக்குமார், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அண்ணாதுரை, நெடுஞ்செழியன், அரவிந்தன், அன்புமணிமாறன், வைத்தியநாதன், வசந்தவேல், வைத்தி, முருகன், நகர செயலாளர் டேனியல்ராஜ், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.