/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வாலிபருக்கு கத்தி வெட்டு போலீசார் விசாரணை வாலிபருக்கு கத்தி வெட்டு போலீசார் விசாரணை
வாலிபருக்கு கத்தி வெட்டு போலீசார் விசாரணை
வாலிபருக்கு கத்தி வெட்டு போலீசார் விசாரணை
வாலிபருக்கு கத்தி வெட்டு போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 28, 2024 04:12 AM
வானூர் : முன்விரோத தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டியவரை போலீசார் தேடிவருகின்றனர்.
திண்டிவனம் சந்தைமேட்டை சேர்ந்தவர் குப்புலிங்கம் மகன் ஏழுமலை,27; திண்டிவனம் கிடங்கல்(1)பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்,26; இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை தொடர்பாக கடந்த 22ம் தேதி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி ஏழுமலை, கிளியனூர் அடுத்த எறையானூரில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து தனது குழந்தைகளை அழைத்து வர சென்றார். அப்போது, அங்கு வந்த சுரேஷிற்கும், ஏழுமலைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த சுரேஷ், கத்தியால் ஏழுமலை மார்பில் வெட்டினார். படுகாயமடைந்த ஏழுமலை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிளியனூர் போலீசார் வழக்கு பதிந்து சுரேஷை தேடிவருகின்றனர்.