/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்
புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்
புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்
புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்
ADDED : ஜூலை 20, 2024 05:35 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில், 'புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம்' செயல்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் 100 கல்லுாரிகளைச் சேர்ந்த நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அரசுப் பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள், உயர்கல்வி பெறும்போது, மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை பெறும் வகையில், தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளது. அந்த திட்டத்தில், மாணவர்கள் கல்லுாரி வாயிலாக யுமிஸ் வலைத்தளம் மூலம் எவ்வாறு பதிவு மேற்கொள்வது என்பது குறித்தும் விளக்கப்பட்டது.
இத்திட்டம் பதிவு தொடர்பான காணொளி விளக்கப்படமும் திரையிடப்பட்டது. மேலும், புதுமைப்பெண் திட்டத்தில், தகுதி வாய்ந்த மாணவிகள் அனைவரும் பயன் பெறுவதை, அனைத்து கல்லுாரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.
புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடர்பாக, அந்தந்த கல்லுாரி நிர்வாகம் விழிப்புணர்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஸ்வரன், கல்லுாரிகளின் நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.