/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மக்களுடன் முதல்வர் திட்டம் அமைச்சர் துவக்கி வைப்பு மக்களுடன் முதல்வர் திட்டம் அமைச்சர் துவக்கி வைப்பு
மக்களுடன் முதல்வர் திட்டம் அமைச்சர் துவக்கி வைப்பு
மக்களுடன் முதல்வர் திட்டம் அமைச்சர் துவக்கி வைப்பு
மக்களுடன் முதல்வர் திட்டம் அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 20, 2024 05:35 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்க விழா நடந்தது.
வி.சாலையில் நடந்த விழாவிற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், சிவா எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். சப் கலெக்டர் முகுந்தன் வரவேற்றார்.
விழாவில் அமைச்சர் பொன்முடி திட்டத்தை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில்,'மக்களுடைய குறைகளை நேரில் சென்று தீர்க்க வேண்டும் என இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் உள்ள 688 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுகிறது.
இத்திட்டத்தில் மக்கள் அனைவரும் தங்கள் குறைகளை தெரிவித்தால் அதிகாரிகள் மனு மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பார்கள்' என்றார்.
கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், ரவிக்குமார் எம்.பி., உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன், பி.டி.ஓ.,க்கள் பாலச்சந்திரன், குலாத்துங்கன், தாசில்தார் யுவராஜ், வட்டார மருத்துவ அலுவலர் வினோத்.
மாவட்ட துணை சேர்மன் ஷீலாதேவி சேரன், ஒன்றியசேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, துணை சேர்மன் ஜீவிதா ரவி, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணைச் சேர்மன் பாலாஜி, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி கவியரசன், ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, ஜெயபால் உட்பட பலர் பங்கேற்றனர்.