/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சாலையில் குவிந்த மண் அகற்ற நடவடிக்கை தேவை சாலையில் குவிந்த மண் அகற்ற நடவடிக்கை தேவை
சாலையில் குவிந்த மண் அகற்ற நடவடிக்கை தேவை
சாலையில் குவிந்த மண் அகற்ற நடவடிக்கை தேவை
சாலையில் குவிந்த மண் அகற்ற நடவடிக்கை தேவை
ADDED : ஜூலை 08, 2024 04:52 AM

மயிலம்: கூட்டேரிப்பட்டில் சாலையில் குவிந்துள்ள மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரிக்குச் செல்லும் சாலையில் கூட்டேரிப்பட்டு ஊராட்சி உள்ளது. இந்த கிராமத்தின் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் பகுதியில் மண் குவிந்துள்ளது.
இதனால் சாலையில் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் போது புழுதி மண் பறந்து பின்னால் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கண்களில் விழுந்து பாதிப்புக்குள்ளாகிறது. மேலும், சில நேரங்களில் இருசக்கர வாகன சக்கரம் மண்ணில் சிக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
இது போன்ற சாலை மையப் பகுதி மற்றும் சாலையோரம் குவிந்த மண்ணை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.