விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விதைகள் ஆய்வு இணை இயக்குனர் ரவி மற்றும் குழுவினர் விழுப்புரம் இருவேல்பட்டு விதை சுத்திகரிப்பு நிலையம், உளுந்தூர்பேட்டை மற்றும் விழுப்புரம் தனியார் விதை விற்பனை நிலையங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
தனியார் விதை உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தில் உண்மை நிலை விதைக்கான விதை ஆதாரம் குறித்து பதிவேடுகளை முறைப்படி பராமரிக்க அறிவுறுத்தினர்.
கொள்முதல் செய்யப்படும் விதை குவியல்களுக்கான கொள்முதல் பட்டியல், அதன் பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல், பதிவு சான்று முதலிய ஆவணங்களை பெற்று, ஆய்வு செய்தும், இருப்பு பதிவேடு, விற்பனை பட்டியல் முதலிய பதிவேடுகளை முறைப்படி பராமரிக்க வேண்டும். பதிவு பெற்ற தரமான விதைகளை மட்டுமே விற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
ஆய்வின்போது, சில கடைகளில் இருந்த 4.92 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 100 கிலோ வீரிய ஓட்டுரக வெண்டை மற்றும் 8 கிலோ வீரியரக தர்பூசணி விதைகள் சரியில்லாததால், அதன் விற்பனைக்கு தடை விதித்தனர்.