ADDED : ஜூலை 23, 2024 11:05 PM

திண்டிவனம் : திண்டிவனத்தில் மாநில அளவில் நடந்த பேட்மிட்டன் போட்டியில் சென்னை அணி முதலிடம் பிடித்தது.
திண்டிவனம் பாண்டியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி, திண்டிவனம் மணிலா நகர் அரிமா சங்கம் சார்பில் பால்பாண்டியன் நாடார் நினைவு மாநில அளவிலான பேட்மிட்டன் இரட்டையர் போட்டி நடந்தது.
போட்டியை டாக்டர் பரசுராமன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். டாக்டர் பழனி ராமன், மணிலா நகர் அரிமா சங்க வட்டார தலைவர் செந்தில்குமார், ஆடிட்டர் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர். போட்டியில் தமிழகம் முழுதுமிருந்தும் பல்வேறு அணிகள் பங்கேற்றன.
சென்னையைச் சேர்ந்த சித்தார்த் அணி முதலிடத்தையும், திண்டிவனம் பாண்டியன் ஸ்போர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த கனிஷ் அணி இரண்டாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.