ADDED : ஜூலை 23, 2024 10:59 PM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஜீப் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார்.
விழுப்புரம் அடுத்த வளவனுார் பக்கமேட்டுப்பாதையைச் சேர்ந்தவர் சின்னதம்பி, 87; இவர், கடந்த 22ம் தேதி, அதே பகுதியில் உள்ள உறவினரின் வீட்டின் முன்பு நின்றிருந்தார். அப்போது, அருகே நின்றிருந்த ஜீப்பை, சாய்கணேஷ் என்பவர், பின்பக்கமாக எடுத்து நிறுத்த முயன்றார், அப்போது சின்னதம்பி மீது ஜீப் மோதியது.
இதில், காயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.