ADDED : ஜூலை 20, 2024 05:49 AM
விழுப்புரம்: வளவனுார் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவையொட்டி பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில் ஆன்மிக பட விளக்க கண்காட்சி நடந்தது.
வளவனுாரில் பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையத்தில், தினமும் உலக பிரசித்தி பெற்ற ராஜயோக தியான பயிற்சி இலவசமாக அளித்து வருகிறது.
தியான நிலைய நிர்வாகி செல்வமுத்துகுமரன் தலைமையில், திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவையொட்டி கோவில் அருகே ஆன்மிக படவிளக்க கண்காட்சியை நடத்தியது.
ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டனர்.