/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பா.ஜ., மாநில தலைவர் பிறந்த நாள் சிறப்பு பூஜை பா.ஜ., மாநில தலைவர் பிறந்த நாள் சிறப்பு பூஜை
பா.ஜ., மாநில தலைவர் பிறந்த நாள் சிறப்பு பூஜை
பா.ஜ., மாநில தலைவர் பிறந்த நாள் சிறப்பு பூஜை
பா.ஜ., மாநில தலைவர் பிறந்த நாள் சிறப்பு பூஜை
ADDED : ஜூன் 05, 2024 03:14 AM

திண்டிவனம்: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு, திண்டிவனம் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
மீண்டும் மத்தியில் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவதற்கும், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டும், திண்டிவனம் ராஜாங்குளம் பகுதியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பா.ஜ., மாநில செயலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் நடந்த சிறப்பு பூஜையில் நகர தலைவர் வெங்கடேச பெருமாள், பொதுச் செயலாளர் புஷ்பராஜ், நிர்வாகிள் வினோத், பாலாஜி, அய்யப்பன், ரங்கசாமி, ேஹமநாதன், ராதிகா உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து ராஜாங்குளம் பகுதி, காந்தி சிலை ஆகிய இடங்களில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.