கொடூர் கிராமத்தில் செடல் திருவிழா
கொடூர் கிராமத்தில் செடல் திருவிழா
கொடூர் கிராமத்தில் செடல் திருவிழா
ADDED : ஜூன் 14, 2024 06:55 AM

வானுார்: கொடூர் கிராமத்தில் பாலமுருகன் கோவில் பிரமோற்சவத்தை முன்னிட்டு செடல் உற்சவம் நடந்தது.
வானுார் அடுத்த கொடூர் கிராமத்தில் தேசமுத்து மாரியம்மன், கெங்கையம்மன், விநாயகர், பாலமுருகன் கோவில்கள் உள்ளன. இக்கோவில் பிரமோற்சவ விழா கடந்த 11ம் தேதி அபிேஷக ஆராதனை யுடன் துவங்கியது.
நேற்று முன்தினம் திருத்தேர் வீதியுலா மற்றும் தேச முத்து மாரியம்மனுக்கு பால் குடம் ஊர்வலமும் நடந்தது. நேற்று காலை 10;00 மணிக்கு, பாலமுருகனுக்கு செடல் உற்சவம் நடந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் அலகு குத்தியும், வாகனங்கள் இழுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.