/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ராஜாங்குளம் வெள்ளவாரி வாய்க்காலில் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ராஜாங்குளம் வெள்ளவாரி வாய்க்காலில் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு
ராஜாங்குளம் வெள்ளவாரி வாய்க்காலில் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு
ராஜாங்குளம் வெள்ளவாரி வாய்க்காலில் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு
ராஜாங்குளம் வெள்ளவாரி வாய்க்காலில் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூலை 04, 2024 12:40 AM

திண்டிவனம் : திண்டிவனம் பகுதிக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள ராஜாங்குளத்திற்கு நீர்வரத்து வாய்க்காலில், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் நிறைந்திருப்பதால் குளத்திற்கு நீர் வரத்து தடைபடுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
திண்டிவனம் நகரின் மைய பகுதியில் ராஜாங்குளம் உள்ளது. இந்த குளம் நகர பகுதிக்கு நிலத்தடி நீர் ஆதராரமாக உள்ளது. மழைக் காலங்களில், மேல்பாக்கம் ஏரியிலிருந்து நிரம்பி வரும் நீர், திண்டிவனம் அய்யந்தோப்பு, மாரிசெட்டிக்குளம் வழியாக வரத்து வாய்க்கால் மூலம் ராஜாங்குளத்திற்கு மழை நீர் வந்தடையும்.
தற்போது, ராஜாங்குளத்திற்கு வரும் வெள்ளவாரி வரத்து வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு துார்ந்துள்ளது.
குறிப்பாக வரத்து வாய்க்கால் பகுதியில் உள்ள நகராட்சி கடைகளிலிருந்து, பின் பக்கம் உள்ள வாய்க்காலில் குப்பை கழிவுகள், பால் பூத்துகளிலிருந்து கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் தினமும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் வாய்காலிலிருந்து நீர் வெளியேறாத அளவிற்கு கழிவுகள் துார்ந்து அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
நகராட்சி சார்பில் கடைக்காரர்களிடம் கழிவுகளை பின்பக்கம் வாய்க்காலில் கொட்டக்கூடாது என்று பல முறை அறிவுறுத்தியும், தொடர்ந்து கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றது.
நகராட்சி அதிகாரிகள் வெள்ளவாரி வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.