/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பட்டா மாற்ற உத்தரவு தரக்கோரி தாலுகா அலுவலகத்தில் தர்ணா பட்டா மாற்ற உத்தரவு தரக்கோரி தாலுகா அலுவலகத்தில் தர்ணா
பட்டா மாற்ற உத்தரவு தரக்கோரி தாலுகா அலுவலகத்தில் தர்ணா
பட்டா மாற்ற உத்தரவு தரக்கோரி தாலுகா அலுவலகத்தில் தர்ணா
பட்டா மாற்ற உத்தரவு தரக்கோரி தாலுகா அலுவலகத்தில் தர்ணா
ADDED : ஜூலை 04, 2024 12:41 AM

திண்டிவனம் : பட்டா மாற்றம் செய்யாததை கண்டித்து தாலுகா அலுவலகம் முன் பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திண்டிவனம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகமுத்து மகள் அமுதா, 28; இவரது, நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்வதற்காக அவரப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆன் லைன் மூலம் கடந்த 22ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விண்ணப்பித்தார்.
பட்டா மாற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதால். திண்டிவனம் தாசில்தாருக்கு ஆன்லைன் மூலம் மனு கொடுத்தார்.
மனு மீதும் நடவடிக்கை இல்லாததால், கால தாமதம் செய்து வருவதை கண்டித்து அமுதா, திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் நேற்று மதியம் 12:30 மணியளவில் தர்ணாவில் ஈடுபட்டார்.
இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த சிலரும் பட்டா மாற்றம் வழங்காததைக் கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
வருவாய்த்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தி, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து 12:45 மணியளவில் கலைந்து சென்றனர்.