/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை; உளுந்துார்பேட்டை அருகே துணிகரம் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை; உளுந்துார்பேட்டை அருகே துணிகரம்
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை; உளுந்துார்பேட்டை அருகே துணிகரம்
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை; உளுந்துார்பேட்டை அருகே துணிகரம்
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை; உளுந்துார்பேட்டை அருகே துணிகரம்
ADDED : ஜூலை 23, 2024 12:14 AM
உளுந்துார்பேட்டை: பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை அடித்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த ஆசனுாரை சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி யோகவர்த்தனி, 75; ஓய்வு பெற்ற ஆசிரியர். கணவரை இழந்த இவர் நேற்று, வீட்டை பூட்டிக் கொண்டு ஆதார் கார்டில் பெயர் திருத்தம் செய்வதற்காக அருகில் உள்ள நெட் சென்டருக்கு சென்றார்.
மதியம் 2:30 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைந்து கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்றபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 6 சவரன் நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது. இதுகுறித்து யோகவர்த்தனி கொடுத்த புகாரின் பேரில் எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.