ADDED : ஜூலை 23, 2024 10:55 PM
மயிலம் : மயிலம் அடுத்த செண்டூர் கிராமத்தில் சாலையைக் கடந்த ஓட்டல் ஊழியர் கார் மோதி இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த மேலக்கொந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் நாகராஜ், 40; ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 11:45 மணிக்கு வேலையை முடித்துக் கொண்டு கிராமத்திற்கு செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடந்துள்ளார்.
அப்போது சென்னை மார்க்கத்தில் இருந்து காரைக்குடிக்குச் சென்ற கார் நாகராஜ் மீது மோதியது. இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.