ADDED : ஜூன் 09, 2024 04:52 AM

திண்டிவனம், : திண்டிவனம் அருகே நாய்கள் கடித்த மானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கீழ்மாவிலங்கை கிராமத்தில், நேற்று வனப்பகுதியில் இருந்து வழிதெரியாமல் மான் வந்துள்ளது. இந்த மானை நாய்கள் துரத்தி கடித்தது. நாய்களிடம் இருந்து மானை, கிராம மக்கள் மீட்டு, திண்டிவனம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். நாய்கள் கடித்ததால் காயமடைந்த மானுக்கு வனத்துறையினர், சிகிச்சை அளித்து பின் மானை வனப்பகுதியில் விட்டனர்.