/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சுற்றுலா பயணியிடம் திருடிய நபர் கைது சுற்றுலா பயணியிடம் திருடிய நபர் கைது
சுற்றுலா பயணியிடம் திருடிய நபர் கைது
சுற்றுலா பயணியிடம் திருடிய நபர் கைது
சுற்றுலா பயணியிடம் திருடிய நபர் கைது
ADDED : ஜூன் 09, 2024 04:51 AM

வானுார் : ஆரோவில் கெஸ்ட் அவுசில் சுற்றுலா பயணியிடம் 20 ஆயிரம் ரூபாய் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பையைச் சேர்ந்தவர் ஹரிஷ் சந்திரசேகர் மனைவி மைதிலி ெஷட்டி, 53; இவர் கடந்த மாதம் 30ம் தேதி ஆரோவில் பகுதிக்கு சுற்றுலா வந்தார். ஆரோவில்லில் உள்ள சரங்கா கெஸ்ட் அவுசில் அறை எடுத்து தங்கினார்.
அப்போது, அவரது அறையில் பேக்கில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் திருடு போனது.
இது குறித்து அவர் ஆரோவில் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து அனுமந்தை அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கர், 50; என்பவரை நேற்று கைது செய்தனர்.