/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மதுபாட்டில் கடத்திய புதுச்சேரி ஆசாமி கைது மதுபாட்டில் கடத்திய புதுச்சேரி ஆசாமி கைது
மதுபாட்டில் கடத்திய புதுச்சேரி ஆசாமி கைது
மதுபாட்டில் கடத்திய புதுச்சேரி ஆசாமி கைது
மதுபாட்டில் கடத்திய புதுச்சேரி ஆசாமி கைது
ADDED : ஜூலை 18, 2024 04:57 AM

வானூர் கிளியனூர் அருகே பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய புதுச்சேரி நபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 135 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கிளியனூர் சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப்பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது, புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலையில், தென்கோடிப்பாக்கம் மேம்பாலத்தின் கீழ் பைக்கில் சந்தேகப்படும் படி வந்த நபரை மடக்கி விசாரித்தனர்.
விசாரணையில் அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையில் 130 புதுச்சேரி குவார்ட்டர் பாட்டில்கள், 750 மி.லிட்டர் கொண்ட 5 மதுபாட்டில்கள், மற்றும் 10 லிட்டர் விஷ சாராயத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து புதுச்சேரி உருளையன்பேட்டை ஒத்தவாடை வீதியை சேர்ந்த சரவணன், 40; என்பரிடம் விசாரித்த போது, அவர் புதுச்சேரி பகுதியில் மதுபாட்டில்களை வாங்கி வந்து, கிளியனூர், திண்டிவனம் போன்ற பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர்.