/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வல்லத்தில் துவக்கி வைப்பு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வல்லத்தில் துவக்கி வைப்பு
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வல்லத்தில் துவக்கி வைப்பு
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வல்லத்தில் துவக்கி வைப்பு
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வல்லத்தில் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 18, 2024 05:00 AM

செஞ்சி, : வல்லத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார்.
வல்லம் ஒன்றியத்தில் தமிழக அரசின் மக்களுடன் முதல்வர் திட்ட முதல் கட்ட முகாம் வல்லத்தில் நடந்தது. கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ஆரணி எம்.பி., தரணிவேந்தன், மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார், ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் முகுந்தன் வரவேற்றார்.
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார். ஊரக வளர்ச்சி துணை கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திண்டிவனம் சப் கலெக்டர் பொருப்பு சரண்யா, மாவட்ட கவுன்சிலர் அன்புச்செழியன், தாசில்தார் ஏழுமலை, பி.டி.ஓ., இளங்கோவன், ஒன்றிய கவுன்சிலர் பக்தவச்சலம், ஊராட்சி தலைவர் மாரியம்மாள் மாணிக்கம், ஒன்றிய செயலாளர்கள் துரை, இளவழுதி, அமைப்பு சாரா தொழிலாளர் அணி அமைப்பாளர் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் 15 அரசுத்துறையினர் முகாமிட்டு பொது மக்களின் மனுக்களை கணினியில் நேரடியாக பதிவேற்றம் செய்தனர்-.