/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம் திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம்
திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம்
திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம்
திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம்
ADDED : ஜூன் 23, 2024 05:42 AM
வானுார்: திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம் நடந்தது.
வானுார் அடுத்த திருவக்கரை கிராமத்தில் பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர் என தனித்தனி கோவில்கள் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் பவுர்ணமி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, அன்று காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
மாலை 6.00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர், வரதராஜ பெருமாள், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
நள்ளிரவு 12:00 மணிக்கு பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி தரிசன வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை அறநிலையத்துறை செயல் அலுவலர் சிவக்குமார், உதவி ஆணையாளர் சந்திரன், ஆய்வாளர் உமாமகேஸ்வரி செய்திருந்தனர்.