/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வாலிபருக்கு கத்திக்குத்து போலீஸ் விசாரணை வாலிபருக்கு கத்திக்குத்து போலீஸ் விசாரணை
வாலிபருக்கு கத்திக்குத்து போலீஸ் விசாரணை
வாலிபருக்கு கத்திக்குத்து போலீஸ் விசாரணை
வாலிபருக்கு கத்திக்குத்து போலீஸ் விசாரணை
ADDED : ஜூன் 16, 2024 06:38 AM
திண்டிவனம்: திண்டிவனத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
திண்டிவனம் அடுத்த காலுார் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாராம் மகன் சந்தோஷ்குமார், 32; தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், நேற்று மாலை 5:00 மணியளவில், கம்பெனி எதிரில் நின்று கொண்டிருந்தார். அப்போது முன்விரோதம் காரணமாக மொளசூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், காலுார் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் ஆகிய இரண்டு பேரும், சந்தோஷ்குமாரிடம் தகராறு செய்து, சந்தோஷ் குமார் கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் குத்தி விட்டு தப்பியோடினர்.காயமடைந்த சந்தோஷ்குமார் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில், விஜயகுமார், பிரவீன்குமார் ஆகிய இருவர் மீதும் திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.