ADDED : ஜூன் 16, 2024 06:38 AM
செஞ்சி: செஞ்சி அருகே பல் டாக்டர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செஞ்சி அருகே சக்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷபியுல்லா மகன் ஷகில் அகமத், 46; இவரது மனைவி நவிதா பதுாய், 45; இருவரும் பல் டாக்டர்கள். இவர்கள், திருவண்ணாமலை சாலையில் பல் மருத்துவமனை வைத்துள்ளனர்.
சில தினங்களாக ஷகில் அகமத், மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று வீட்டின் மாடியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.