/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஊர்காவல் படை காவலர் 'போக்சோ'வில் கைது ஊர்காவல் படை காவலர் 'போக்சோ'வில் கைது
ஊர்காவல் படை காவலர் 'போக்சோ'வில் கைது
ஊர்காவல் படை காவலர் 'போக்சோ'வில் கைது
ஊர்காவல் படை காவலர் 'போக்சோ'வில் கைது
ADDED : ஜூலை 09, 2024 04:03 AM

செஞ்சி : சிறுமியிடம் அத்துமீறி நடந்த ஊர்காவல் படை காவலரை போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வீரணாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன், 59; ஊர்க்காவல் படை காவலர். வீட்டின் அருகே ஹெல்த் கேர் சென்டர் நடத்தி வருகிறார். மேலும், செஞ்சி அஞ்சல் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகவும் பணிபுரிந்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் வெளியூரைச் சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார்.
பின், சிறுமியிடம் இது குறித்து வெளியே சொன்னால் உன்னையும், தாய், தந்தையையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் நேற்று மாலை செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து ராஜசேகரனை கைது செய்தனர்.