/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விக்கிரவாண்டி தொகுதியில் இறுதிக்கட்ட கவனிப்பு தீவிரம் விக்கிரவாண்டி தொகுதியில் இறுதிக்கட்ட கவனிப்பு தீவிரம்
விக்கிரவாண்டி தொகுதியில் இறுதிக்கட்ட கவனிப்பு தீவிரம்
விக்கிரவாண்டி தொகுதியில் இறுதிக்கட்ட கவனிப்பு தீவிரம்
விக்கிரவாண்டி தொகுதியில் இறுதிக்கட்ட கவனிப்பு தீவிரம்
ADDED : ஜூலை 09, 2024 04:05 AM
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொட்டி, பிரதான கட்சிகள், நேற்று இறுதிக்கட்டமாக வேட்டி, சேலையுடன், 500 ரூபாய் வழங்கினர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நாளை 10ம் தேதி நடக்கிறது. தி.மு.க., - பா.ம.க., - நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 29 பேர் களத்தில் உள்ளனர். தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 10 நாட்களாக கிராமங்களில் இவர்கள் முகாமிட்டு, தாராளமாக செலவு செய்தனர். வாக்காளர்களை கவர 2 நாட்களுக்கு முன், தி.மு.க., தரப்பில் 500, 1000 ரூபாய் வழங்கிய நிலையில் நேற்று காலை இறுதிக்கட்ட கவனிப்பாக 500 ரூபாய் வழங்கியுள்ளனர்.
மேலும், சர்வ சாதரணமாக, வீடுகள் தோறும் அனைவருக்கும் சால்வை அணிவித்து, ஓட்டுக்கும் பணம் வழங்கப்பட்டதாக பொது மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
காணை, விக்கிரவாண்டி ஒன்றிய கிராமங்களில், வேட்டி, சேலை, சட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அடுத்த சிந்தாமணி, முண்டியம்பாக்கம் பகுதிகளில் சிலர் மொபைல் போன் வழங்கியுள்ளனர்.
சோழாம்பூண்டி, தென்னமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் வேட்டி, சேலையுடன், சில்வர் கப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க., தரப்பில் 1,500 முதல் 2,000 வரை வழங்கியுள்ளனர். பா.ம.க., தரப்பில் காணை, விக்கிரவாண்டி ஒன்றியங்களில், ஓட்டுக்கு 500 ரூபாய் வழங்கப்பட்டதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
நேற்று மாலையுடன் இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவு செய்த நிலையில், ஓட்டுக்கான கவனிப்பதையும் கச்சிதமாக கொடுத்து முடித்துள்ளனர்.
ஆரம்பத்தில் ஓட்டுக்கு பரிசு பொருள், பணம் கொடுப்பதை தடுத்து புகார் கூறி வந்த பா.ம.க., தரப்பு, பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக, அவர்களும் சரண்டராகி, அவர்களால் முடிந்ததை இறுதி கவனிப்பாக வழங்கியுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியினரும் இதனை தடுக்க முயன்று முடியாததால், பிரசாரத்தோடு ஒதுங்கிக்கொண்டதாக, தொகுதி மக்கள் தெரிவித்தனர்.