ADDED : ஜூன் 19, 2024 01:21 AM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே சாலையோரம் நடந்து சென்றவர் மீது பைக் மோதிய விபத்தில் பைக்கை ஓட்டிச் சென்றவர் இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 35; இவர், கடந்த 16ம் தேதி இரவு ஸ்பிளண்டர் பைக்கில் விழுப்புரத்திலிருந்து செஞ்சி நோக்கிச் சென்றார்.
அசோகபுரி அருகே வந்தபோது, சாலையோரம் நடந்து சென்ற அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி பாண்டுரங்கன், 67; என்பவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த இருவரும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு நேற்று முன்தினம் ஆறுமுகம் இறந்தார்.
பாண்டுரங்கன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கெடார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.