Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் அதிகாரிகள் திணறல்

ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் அதிகாரிகள் திணறல்

ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் அதிகாரிகள் திணறல்

ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் அதிகாரிகள் திணறல்

ADDED : ஜூலை 22, 2024 11:56 PM


Google News
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

தமிழகத்தில் அரசு இடத்தில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை கணக்கிட்டு அகற்றிடவும், ஆக்கிரமிப்புகளில் உள்ள நீர்நிலை மற்றும் வரத்து வாய்க்கால்களை அளவீடு செய்து, மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை ஐகோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது.

இந்நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், அதிகாரிகள் திணறி வருகின்றனர். பல இடங்களில் அரசு புறம்போக்கு இடங்கள், செல்வாக்கு மிக்க நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், சில இடங்களில் முன்விரோதம் மற்றும் பணம் பறிக்கும் நோக்கத்தில், அரசுக்கு மொட்டை பெட்டிஷன் போடும் கலாசாரம் அதிகரித்து வருகிறது.

உள்ளாட்சி, வருவாய் உள்ளிட்ட அரசு துறைகளின் அனுமதி பெற்று, தனியார் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் கூட அரசு இடத்தில் உள்ளதாகவும். அரசுக்கு புகார் செல்கின்றன.

மேலும், குடியிருப்பு பகுதியில் பல ஆண்டுகளாக உள்ள வீடுகள் கூட, நீர் வழி தடத்தில் உள்ளதாக, புகார்கள் அனுப்பப்படுகிறது.

இதன் காரணமாக அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், கோர்ட் உத்தரவு மற்றும் பெட்டிஷன் பார்ட்டிகளின் நெருக்கடி ஆகியவற்றுக்கு இடையே சிக்கி அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர்.

சர்வே செய்யாமல் அறிவிப்பு நோட்டீஸ்

ஒரு சில இடங்களில், பெட்டிஷன்தாரர்கள் கொடுக்கும் மன அழுத்தம் காரணமாக, அரசுத்துறை அதிகாரிகள் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக கோர்ட் உத்தரவுகளில், இடத்தை அளந்து, ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கண்டறிந்தால், அதனை அகற்ற வேண்டுமென கூறப்படுகிறது. அந்த பிரச்னைகளில் கூட சம்மந்தப்பட்ட சொத்தின் உரிமையாளருக்குகூட தகவல் தெரிவிக்காமல், இடத்தையும் அளவீடு செய்யாமல், ஆக்கிரமிப்பு அகற்றும் நோட்டீஸ் அவசர அவசரமாக அனுப்பப்பட்டு வருகிறது.



-நமது நிருபர்-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us