/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ குறைகேட்பு கூட்டம்; 717 மனுக்கள் குவிந்தன குறைகேட்பு கூட்டம்; 717 மனுக்கள் குவிந்தன
குறைகேட்பு கூட்டம்; 717 மனுக்கள் குவிந்தன
குறைகேட்பு கூட்டம்; 717 மனுக்கள் குவிந்தன
குறைகேட்பு கூட்டம்; 717 மனுக்கள் குவிந்தன
ADDED : ஜூலை 22, 2024 11:57 PM

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், 717 மனுக்கள் பெறப்பட்டது.
லோக்சபா தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தை விதிமுறை முடிவடைந்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் 3 மாதங்களுக்குப் பிறகு நேற்று பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கலெக்டர் பழனி, தலைமை தாங்கி மனுக்களைப் பெற்றார். முதியோர் உதவிதொகை, வீட்டு மனை பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை கேட்பு என பல்வேறு துறைகள் தொடர்பாக 717 மனுக்கள் பெறப்பட்டது.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில், டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முகுந்தன் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.